விவசாயிக்கு ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் அபராதம்

ஆழியாற்றில் தண்ணீர் திருடிய விவசாயிக்கு ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-03-08 16:45 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே ஆத்துப் பொள்ளாச்சியில் விவசாய மின் இணைப்பு மூலம் சட்டவிரோதமாக ஆற்றில் தண்ணீர் திருடுவதாக கோவை மின்சார வாரிய மின் திருட்டு சிறப்பு தடுப்பு குழுவிற்கு புகார் சென்றது.

 இதைத்தொடர்ந்து மார்ச்ச நாயக்கன்பாளையம் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் ராம்குமார் மற்றும் மின் திருட்டு சிறப்பு தடுப்பு சிறப்பு குழு உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆத்து பொள்ளாச்சி ஆழியாற்றில் ஆய்வு செய்தனர்.

 அப்போது விவசாய மின் இணைப்பிற்கு அனுமதி வாங்கிவிட்டு, அதன் மூலம் மோட்டார் வைத்து ஆற்றில் தண்ணீர் திருடுவது தெரியவந்தது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், விவசாய மின் இணைப்பிற்கு அனுமதி வாங்கி விட்டு சட்டவிரோதமாக ஆழியாற்றில் மோட்டார் வைத்து தண்ணீர் திருடுவதாக புகார் வந்தது. 

அதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் விவசாயி செந்தில் குமாரசாமி என்பவர் விவசாய மின் இணைப்பு மூலம் ஆற்றில் மோட்டார் வைத்து தண்ணீர் திருடுவது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவருக்கு ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

மேலும் தண்ணீர் திருடுவதற்கு பயன்படுத்திய மோட்டாரை ஆற்றில் இருந்து அகற்ற அவருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விவசாய மின் இணைப்பிற்கு அனுமதி வாங்கிவிட்டு அனுமதிக்கு மாறாக செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்