கும்பகோணத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு சரக்கு ரெயிலில் 1020 டன் நெல் மூட்டைகள் வந்தன.

கும்பகோணத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு சரக்கு ரெயிலில் 1020 டன் நெல் மூட்டைகள் வந்தன.

Update: 2022-03-08 16:44 GMT
பொள்ளாச்சி

கும்பகோணத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு சரக்கு ரெயிலில் 1020 டன் நெல் மூட்டைகள் வந்தன.

நெல் மூட்டைகள்

தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் தற்போது நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கும்பகோணத்தில் இருந்து பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு நேற்று காலை 7.20 மணிக்கு சரக்கு ரெயிலில் நேற்று வந்தன.

இதை தொடர்ந்து நெல் மூட்டைகளை தொழிலாளர்கள் லாரியில் ஏற்றி, பொள்ளாச்சி நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு கொண்டு சென்றனர். இதை நுகர்பொருள் வாணிப கழக கண்காணிப்பாளர் (நடமாட்டம் பிரிவு) சேகர், உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோர் கண்காணித்தனர்.
இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது:-

1020 டன்

தஞ்சாவூர், கும்பகோணத்தில் அரசின் நேரடி கொள்முதல் மையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது கொள்முதல் செய்யப்பட்ட சன்ன ரக நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கும்பகோணத்தில் இருந்து நேற்று முன்தினம் (நேற்று) சரக்கு ரெயில் புறப்பட்டது.

திருச்சி, கோவை வழியாக பொள்ளாச்சிக்கு வந்த சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் 25 ஆயிரத்து 510 நெல் மூட்டைகள் இருந்தன. மொத்தம் 1020 டன் சன்ன ரக நெல் வந்தது. இதை 65 லாரிகளில் ஏற்றி நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

 இந்த நெல்லை அரிசியாக்கி ரேஷன் கடை, சத்துணவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்