கஞ்சா வைத்திருந்த மூதாட்டி கைது
போடி பகுதியில் கஞ்சா வைத்திருந்த மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்
போடி:
போடி பகுதியில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது கீழராஜ வீதியில் சந்தேகப்படும்படி கையில் பையுடன் நின்று கொண்டிருந்த மூதாட்டியை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர், போடி கீழராஜ வீதியை சேர்ந்த முருகேசன் மனைவி சரசு (வயது 65) என்றும், அவர் வைத்திருந்த பையில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரசுவை கைது செய்தனர்.