போடி அருகே மலைப்பகுதியில் காட்டுத்தீ

போடி அருகே மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவியது

Update: 2022-03-08 16:32 GMT
போடி:
போடி அருகே சிலமலை கிராமத்திலிருந்து ராசிங்காபுரம் செல்லும் வழியில் ஒண்டிவீரப்பசுவாமி கோவில் மலைப்பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென்று பரவியது. நேற்று காலை வரை தீ எரிந்து கொண்டிருந்தது. தகவலறிந்த வனத்துறையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர். இந்த மலைப்பகுதி நியூட்ரினோ திட்டம் அமைய உள்ள அம்பரப்பர் மலைப்பகுதி அருகே இருப்பது குறிப்பிடத்தக்கது

மேலும் செய்திகள்