உளுந்தூர்பேட்டை அருகே பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றி கொலை மிரட்டல் கணவன் உள்பட 5 பேர் மீது வழக்கு

உளுந்தூர்பேட்டை அருகே பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றி கொலை மிரட்டல் விடுத்த கணவன் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனா்.

Update: 2022-03-08 16:29 GMT

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை தாலுகா நல்லாளகுப்பம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி(வயது 38). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இந்தநிலையில் குழந்தை இன்மையை காரணம் காட்டி, அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் கிருஷ்ணகுமாரியை அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் கிருஷ்ணகுமாரியை அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கிருஷ்ணகுமாரி தனது அண்ணன் வெங்கடேசன் என்பவருடன் தனது கணவர் வீட்டில் உள்ளஆதார் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களை எடுக்க சென்றார்.

அப்போது அன்பழகன், அவரது தாய் சகுந்தலா, தந்தை சுப்புராயன் உள்பட 5 பேர் சேர்ந்து கிருஷ்ணகுமாரியை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து கிருஷ்ணகுமாரி உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில்  இன்ஸ்பெக்டர் விஜி தலைமையிலான போலீசார் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்