கோவையை சேர்ந்த மாணவர், உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து ரஷியாவுக்கு எதிரான பேரில் பங்கேற்பது குறித்து மத்திய மாநில உளவுத்துறை விசாரணை நடத்தி வருகிறது

கோவையை சேர்ந்த மாணவர், உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து ரஷியாவுக்கு எதிரான பேரில் பங்கேற்பது குறித்து மத்திய மாநில உளவுத்துறை விசாரணை நடத்தி வருகிறது;

Update: 2022-03-08 15:34 GMT

கோவை

கோவையை சேர்ந்த மாணவர், உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து ரஷியாவுக்கு எதிரான பேரில் பங்கேற்பது குறித்து மத்திய- மாநில உளவுத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இது குறித்த விவரம் வருமாறு

கோவை மாணவர்

கோவையை அடுத்த கவுண்டம்பாளையம் அருகே சுப்பிரமணியம்பாளையம் சுவாதி கார்டனை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது52). பர்னிச்சர் கடை நடத்தி வருகி றார். இவருடைய மனைவி ஜான்சி லட்சுமி. இவர்களுக்கு சாய்நிகேஷ் (வயது22), சாய்ரோஷித் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 

சாய் நிகேஷ், காரமடையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 வரை படித்தார். இவருக்கு சிறுவயது முதலே ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என விரும்பினார். 

அதன்படி அவர், 2 முறை முயற்சி செய்தும் உயரம் குறைவு காரணமாக இந்திய ராணுவத்தில் சேர முடியவில்லை. 

ஏமாற்றம்

இதையடுத்து அமெரிக்க ராணுவத்தில் சேர விரும்பி சென்னை தூதர கத்தை அணுகினார். அதிலும் சாய்நிகேசுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

இதையடுத்து அவர், கடந்த 2019-ம் ஆண்டு உக்ரைன் நாட்டில்  கார்கிவ் நகரில் உள்ள நேசனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் விமானவியல் துறையில் சேர்ந்து படித்து வந்தார்.

இதற்கிடையே அவருக்கு உக்ரைனில் உள்ள வீடியோ கேம் டெலப் மெண்ட் நிறுவனத்தில் பகுதிநேர வேலை கிடைத்து உள்ளதாகவும், படித்துக்கொண்டே வேலை செய்து வருவதாகவும் செல்போனில் தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார்.

ராணுவத்தில் சேர்ந்தார்

இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. இதனால் அங்குள்ள பதற்றமான சூழல் காரணமாக வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தங்களின் நாடுகளுக்கு செல்ல தொடங்கினர். 

இது போல்  சாய் நிகேசையும் ஊருக்கு வந்து விடுமாறு பெற்றோர் அழைத்தனர்.


அப்போது அவர், ஜார்ஜியா நேஷனல் லெஜியன் துணை ராணுவ பிரிவில் சேர்ந்து விட்டதாகவும், 

ரஷியாவுக்கு எதிராக போரிட்டு வருவதாகவும் கூறி உள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக தாய் நாட்டுக்கு வருமாறு அவரை அழைத்து உள்ளனர். 

உளவுத்துறை விசாரணை

ஆனால் அவர், தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறியுள்ளார். ஆனாலும் நிம்மதி அடையாத பெற்றோர், மகனை மீட்டு தர வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறைக்கு இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்தனர்.


இது குறித்து மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறையினர் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். முதல் கட்டமாக சாய்நிகேஷின் பெற்றோரிடம் விசாரித்தனர். 

வருகிற ஜூலை மாதம் படிப்பு முடிந்து நாடு திரும்புவான் என்ற நம்பி இருந்த நிலையில், சாய்நிகேஷ் போர் நடைபெறும்  உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து இருப்பதால் தங்களின் மகனின் நிலை குறித்து பெற்றோர் கவலை அடைந்து உள்ளனர். 

பரபரப்பு

உக்ரைனில் போர் நடைபெற்று வருவதால் மகனின் நிலை குறித்து பரிதவித்து வருவதாகவும், எந்த கருத்தையும் கூறவிரும்ப வில்லை என்றும் சாய்நிகேஷின் பெற்றோர் தெரிவித்தனர்.

உக்ரைன் போர் காரணமாக இந்திய மாணவர்கள் இந்தியா திரும்பும் நிலையில் கோவை மாணவர் சாய்நிகேஷ் மட்டும் அந்த நாட்டு ராணு வத்தில் சேர்ந்து ஆதரவாக போர் புரிந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 சாய்நிகேஷ் போல் இந்திய மாணவர்கள் வேறு யாராவது உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து உள்ளார்களா? என்று மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்