பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் தேர் வீதிஉலா

பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி தேர் வீதிஉலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2022-03-08 15:13 GMT
கூடலூர்

பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி தேர் வீதிஉலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மாரியம்மன் கோவில் திருவிழா

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே பொக்காபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா கடந்த 4-ம் தேதி தொடங்கியது. இதையொட்டி காலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

அன்று இரவு 8 மணிக்கு அம்மனுக்கு அலங்கார விசேஷ பூஜைகள் நடை பெற்றன. 2-வது நாள் மகா தீபாராதனை, திருவிளக்கு பூஜை, அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

3-வது நாள் அம்மனுக்கு பல்வேறு விசேஷ பூஜைகளும், கங்கா பூஜையும், அம்மன் கரகம் ஊர்வலமும் நடைபெற்றது. 

தேர் வீதிஉலா

4-வது நாளான  5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கரகம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சிம்ம வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் நீலகிரி மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சிறப்பு பூஜைகள்

அப்போது ஆதிவாசி மக்கள் தங்களது பாரம்பரிய இசைக் கருவிகளை இசைத்தபடி நடனமாடி சென்றனர். மேலும் ஏராளமான மக்கள் உப்புகளை தூவி அம்மனை வழிபட்டனர். 

 காலை 5 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பகல் 11 மணிக்கு மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் கரகங்கள் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். 

தொடர்ந்து 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 8.30 மணிக்கு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. 

முன்னதாக பக்தர்களின் வசதிக்காக கோவில் விழாவையொட்டி ஊட்டி, கூடலூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

மேலும் செய்திகள்