மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட 778 வேட்பாளர்கள் தேர்தல் செலவின கணக்கை 23-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது

மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட 778 வேட்பாளர்கள் தேர்தல் செலவின கணக்கை 23-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது

Update: 2022-03-08 14:40 GMT

கோவை

கோவை மாநகராட்சியில் 100 வார்டு கவுன்சிலர் பதவிக்கு மொத்தம் 778 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 

இதில் மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளர்கள் ரூ.85 ஆயிரத்துக்குள் தேர்தல் செலவு செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் நிர்ணயித்து இருந்தது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் தேர்தல் செலவை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.

இது குறித்து மாநகராட்சி தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது

மாநகராட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை கடந்த மாதம் 22-ந் தேதி நடைபெற்றது. இதில், போட்டியிட்ட வேட்பாளர்கள் ஒரு மாதத்துக் குள் தேர்தல் செலவின கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். 

அதன் படி இந்த மாதம் 23-ந் தேதிக்குள் அனைத்து வேட்பாளர்களும் செலவின கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அவை, அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும். தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

எனவே தேர்தல் செலவு கணக்க தாக்கல் செய்ய வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். 

இதேபோல் பேரூராட்சி, நகராட்சிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களும் வருகிற 23-ந் தேதிக்குள் தேர்தல் கணக்கு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்