கோவையில் காதல் திருமணம் செய்த என்ஜினீயரின் தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல திட்டமிட்ட 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்

கோவையில் காதல் திருமணம் செய்த என்ஜினீயரின் தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல திட்டமிட்ட 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-03-08 14:32 GMT

கோவை

கோவையில் காதல் திருமணம் செய்த என்ஜினீயரின் தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல திட்டமிட்ட 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது

காதல் திருமணம்

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் குமரேசன். தங்க நகை பட்டறை தொழிலாளி. இவருடைய மகன் அருண்குமார் (வயது 27). என்ஜினீயர். இவர் ஐதராபாத்தில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 


அங்கு அவர் தன்னுடன் பணியாற்றிய திருவாரூரை சேர்ந்த சகானா அன்மிகாவுடன் (26) பழக்கம் ஏற்பட்டது.

 பின்னர் அது காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

மதமாற்றம்

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக காதல் தம்பதி, கோவை செல்வபுரம் வந்து அருண்குமார் வீட்டில் வசித்து வந்தது. 

வீட்டில் இருந்தபடியே அருண்குமார் வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையே அவருடைய மனைவி இந்து மதத்துக்கு மாறியதாக தெரிகிறது.


இதை அறிந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் அருண்குமாரை மதம் மாறுமாறு கூறியதாக தெரிகிறது. 

அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார். எனவே அவரின் தந்தை குமரேசனிடம் பேசி, தங்களின் மகனை மதம் மாற அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டு உள்ளனர். இதை அவர் கடுமையாக கண்டித்து உள்ளார்.

சுட்டுக்கொல்ல திட்டம்

இந்தநிலையில் ஒரு வாட்ஸ்-அப் குரூப்பில் பகிரும் தகவல்களை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் ரகசியமாக கண் காணித்தனர்.

 இதில், கொல்கத்தாவில் துப்பாக்கி ஆர்டர் செய்த 5 பேர் கொண்ட ஒரு கும்பல் 3 நாட்களுக்கு முன்பு கோவையில் முகாமிட்டு குமரேசனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது. 


மேலும் அந்த திட்டம் தொடர்பாக வாட்ஸ்-அப் குரூப்பில் பகிரப் பட்ட தகவல்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள், கோவை மாநகர போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். 

அதன்பேரில் செல்வபுரம் போலீசார், வாட்ஸ்- அப் குரூப்பில் தகவல் பகிர்ந்தவர்கள் யார்?  என்பது குறித்து ரகசிய விசாரணை நடத்தினர்.

5 பேர் கும்பல்

அதில், அருண்குமார் மதம் மாறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவருடைய தந்தை குமரேசனை சுட்டுக்கொல்ல திட்டம் தீட்டியது 

ஈரோட்டை சேர்ந்த முகமது அலி ஜின்னா (47), திருச்சியை சேர்ந்த இம்ரான் கான் (39), சதாம் உசேன் (29), சென்னையை சேர்ந்த பக்ருதீன் (54), உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராம்வீர் (20) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதற்கிடையே 5 பேர்கொண்ட கும்பலை அனுப்பியது யார்?, இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். 

காதல் திருமணம் செய்த என்ஜினீய ரின் தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல திட்டமிட்ட 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்