வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு விவரம் சரிபார்ப்பதாக கூறி கோவையை சேர்ந்த 3 பேரிடம் நூதன முறையில் ரூ.13 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு விவரம் சரிபார்ப்பதாக கூறி கோவையை சேர்ந்த 3 பேரிடம் நூதன முறையில் ரூ.13 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கோவை
வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு விவரம் சரிபார்ப்பதாக கூறி கோவையை சேர்ந்த 3 பேரிடம் நூதன முறையில் ரூ.13 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது
வங்கி கணக்கு புதுப்பிப்பு
கோவை கணபதி மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன் (வயது 51).இவர் நஞ்சப்பா ரோட்டில் உதிரிபாகங்கள் விற்பனை கடை வைத்துள்ளார்.
இவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வந்தது.
அதில், உங்களுடைய வங்கி கணக்கு முடிவதை தவிர்க்கவும், புதுப்பிக் கவும் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
உடனே அவர் அந்த லிங்க்கை கிளிக் செய்து பான் கார்டு, ரகசிய எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிட்டார்.
மேலும் அவர் தனது செல்போன் எண்ணுக்கு வந்த ஒரு ஓ.டி.பி. எண் ணையும் தெரிவித்து உள்ளார். அதன்பிறகு சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து பல்வேறு கட்டமாக ரூ.9 லட்சத்து 93 ஆயிரத்து 706 எடுக்கப்பட்டது.
செல்போன் அழைப்பு
இதேபோல் கோவை செல்வபுரம் முத்துசாமி காலனியை சேர்ந்தவர் பாலு. இவருடைய மனைவி சந்திரகலா (50). இவருடைய கணவரின் வங்கி கணக்கில் சந்திரகலாவின் செல்போன் எண் இணைக்கப்பட்டு இருந்தது.
சந்திரகலாவை செல்போனில் அழைத்து, உங்களுக்கு வங்கியில் இருந்து கூரியர் அனுப்பப்பட்டு உள்ளதாக ஒருவர் பேசினார்.
சிறிது நேரத்தில் மற்றொரு நபர் கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவ தாகவும், உங்கள் செல்போன் எண்ணுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணை தெரிவிக்குமாறு கூறியுள்ளார். அதை நம்பி அவர் ஓ.டி.பி. எண்ணை கூறினார்.
இதைத்தொடர்ந்து பாலுவின் வங்கி கணக்கில் இருந்து பல கட்டங்களாக ரூ.2 லட்சத்து 39 ஆயிரத்து 980 எடுக்கப்பட்டது.
மோசடி ஆசாமிகள்
இது போல் கோவை காளப்பட்டி திருமுருகன் நகரை சேர்ந்தவர் துரைராஜ் (50). இவருடைய செல்போன் எண்ணுக்கு பான்கார்டு விவரங்களை சரிபார்க்குமாறு கூறி லிங்க்குடன் ஒரு குறுஞ்செய்தி வந்தது.
அந்த லிங்க்கில் பான்கார்டு மற்றும் வங்கி கணக்கு விவரங்க ளை துரைராஜ் பதிவிட்டார். சிறிது நேரத்தில் ஓ.டி.பி. எண்ணை உள்ளீடு செய்த உடன் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.60 ஆயிரம் பறிபோனது.
இது தொடர்பாக உன்னி கிருஷ்ணன், சந்திரலேகா, துரைராஜ் ஆகியோர் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மொத்தம் ரூ.13 லட்சம் மோசடி செய்த ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.