மும்பையில் பெண் போலீசாருக்கு 8 மணி நேர வேலை

மகளிர் தின பரிசாக மும்பையில் பெண் போலீசாருக்கு 8 மணி நேர வேலை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2022-03-08 14:14 GMT
கோப்பு படம்
மும்பை, 
மகளிர் தின பரிசாக மும்பையில் பெண் போலீசாருக்கு 8 மணி நேர வேலை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
8 மணி நேர வேலை
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டது.. இந்தநிலையில் மும்பை போலீஸ் கமிஷனர் உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார். அதில் இன்று முதல் மும்பையில் பெண் போலீசாருக்கு 8 மணி நேர வேலை அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
 இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி பெண் போலீசாருக்கு 2 முறைகளில் வேலை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்று அவர்கள் காலை 8 முதல் மதியம் 3, மதியம் 3 முதல் இரவு 10 மணி, இரவு 10 முதல் காலை 8 மணி வரை ஆகிய 3 ஷிப்டுகளில் ஏதாவது ஒரு நேரத்தில் வேலை பார்க்க வேண்டும். 
அல்லது காலை 7 முதல் மதியம் 3 மணி, மதியம் 3 முதல் இரவு 11 மணி, இரவு 11 முதல் காலை 7 மணி ஆகிய 3 ஷிப்டுகளில் ஒன்றில் பணிக்கு வரலாம்" என்றார்.
பொறுப்பு டி.ஜி.பி.
 சீனியர் இன்ஸ்பெக்டர்கள் பெண் போலீசாருடன் ஆலோசித்து அவர்களுக்கான பணி நேரத்தை ஒதுக்க வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதை அமல்படுத்துவதில் பிரச்சினை ஏற்பட்டால் அதிகாரிகள், துணை போலீஸ் கமிஷனரை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
 சஞ்சய் பாண்டே பொறுப்பு டி.ஜி.பி.யாக இருந்த போது கடந்த ஜனவரி மாதம் நாக்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பெண் போலீசாருக்கு 8 மணி நேர வேலை திட்டம் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்