பில்லமநாயக்கன்பட்டியில் நாளை ஜல்லிக்கட்டு

திண்டுக்கல் அருகே பில்லமநாயக்கன்பட்டியில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறத;

Update:2022-03-08 18:55 IST
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள பில்லமநாயக்கன்பட்டியில் நாளை (புதன்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, உதவி கலெக்டர் பிரியங்கா, ஆர்.டி.ஓ. பிரேம்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு முடியும் வரை போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து அனுமதிக்க வேண்டும். அதேபோல் தீயணைப்பு வீரர்கள், மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்