திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரியில் மகளிர் தினவிழா
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரியில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் பெண்கள் கூட்டமைப்பு மன்றம் மற்றும் நாட்டு நலப்பணிதிட்ட அணிகள் 49 மற்றம் 50 சார்பில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். வணிகவியல் துறை போராசிரியர் ஷீலா ஜெபஸ்டா வரவேற்று பேசினார். விழாவில், சிறப்பு விருந்தினராக தூய மரியன்னை கல்லூரியின் பொருளியல் துறை போராசிரியர் தா.அமுதா கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் 'ஆளுமையின் ஆற்றல்’ என்ற தலைப்பில் மகளிரின் ஆளுமைகள் குறித்தும், அதனால் ஏற்படுகின்ற சமூக, பொருளாதாரம், குடும்ப முன்னேற்றம் குறித்தும் பேசினார்.
நிகழ்ச்சிகளை, பொருளியல் துறை 3-ம் ஆண்டு மாணவி பாத்திமா ஜஹ்ரா, முதுகலை தமிழ் முதலாமாண்டு மாணவி சித்திரை வடிவு ஆகியோர் தொகுத்து வழங்கினர். முதுகலை தமிழ் முதலாமாண்டு மாணவி பேபி ஷாலினி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை மகளிர் கூட்டமைப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகவல்லி, ஷீலா ஜெபஸ்டா மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் ஜான்ஸிராணி, சாந்தா ஆகியோர் செய்திருந்தனர்.