வேறு பெண்ணுடன் செல்போனில் பேசியதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை

வேறு பெண்ணுடன் ெசல்போனில் பேசியதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-08 12:04 GMT
பெண்ணுடன் செல்போனில் பேச்சு

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா (வயது 22). இவர் தனது சகோதரனுடன் காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த சோகண்டி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி சுங்குவார்சத்திரம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் கிருஷ்ணாவுக்கும் உறவுகார பெண் பூஜாவுக்கும் சொந்த ஊரில் திருமணம் நடைபெற்றது. கடந்த 10 நாட்களுக்கு முன் மனைவியை அழைத்து கொண்டு வந்து சோகண்டியில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று கிருஷ்ணா, ஒரு பெண்ணுடன் செல்போனில் நீண்ட நேரம் பேசி கொண்டிருந்தார். இதை பார்த்த அவரது மனைவி பூஜா கணவரை கண்டித்ததுடன் கிருஷ்ணாவின் செல்போனை தூக்கி போட்டு உடைத்து உள்ளார். பின்னர் பூஜா குளியல் அறைக்கு சென்று விட்டார்.

தற்கொலை

இதில் மனம் உடைந்த கிருஷ்ணா வீட்டின் வராண்டாவில் கொக்கியில் மனைவி பூஜாவின் துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டார். குளியல் அறையில் இருந்து வந்து பார்த்த பூஜா கணவர் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்