மாநில சிலம்பாட்ட போட்டி: ஸ்ரீவைகுண்டம் மாணவர்கள் சாதனை

மதுரையில் நடைபெற்ற மாநில சிலம்பாட்ட போட்டியில் ஸ்ரீவைகுண்டம் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்

Update: 2022-03-08 11:22 GMT
ஸ்ரீவைகுண்டம்:
மதுரை பாத்திமா கல்லூரி விளையாட்டு அரங்கத்தில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியின் தலைமை நடுவராக தமிழ் பாரம்பரிய சிலம்பம் பள்ளியின் பொதுச் செயலாளர் சுரேஷ்குமார் செயல்பட்டார். இப்போட்டியில் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த மாணவர்கள் தனித்திறமை மற்றும் சண்டை பிரிவில் பங்கேற்று 6 தங்கப் பதக்கமும், ஒரு வெள்ளிப் பதக்கமும், 5 வெண்கல பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை தமிழ் பாரம்பரிய சிலம்ப பள்ளியின் மாவட்ட தலைவர் செந்தில், செயலாளர் முத்துராஜா மற்றும் பயிற்சியாளர்கள் ரியண்டஸ், அதிஷ்குமார் ஆகியோர் பாராட்டினர்.

மேலும் செய்திகள்