தூத்துக்குடியில் வியாழக்கிழமை மின்தடை

தூத்துக்குடியில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன;

Update:2022-03-08 16:48 IST
தூத்துக்குடி:

தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் மடத்தூர், சிப்காட் வளாகம், ராஜீவ் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலை தொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகர், 3-வது மைல், பத்திநாதபுரம், சங்கர் காலனி, இந்திய உணவுக்கழக குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், இ.பி.காலனி, டைமண்ட் காலனி, மதுரை பைபாஸ் ரோடு, ஏழுமலையான் நகர், சில்வர்புரம், பால்பாண்டி நகர், பண்டாரம்பட்டி, சங்கரப்பேரி, ஆசீர்வாத நகர், முத்துநகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், சின்னக்கண்ணுபுரம், புதூர் பாண்டியாபுரம், அகில இந்திய வானொலி நிலையம், கதிர்வேல் நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை, தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வினியோக செயற்பொறியாளர் எஸ்.தனலட்சுமி தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்