அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் பெண் அதிகாரிகள் தலைமை தாங்குவார்கள்: ஆவடி கமிஷனர்
ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆவடி போலீஸ் கமிஷனரகம் இன்று(செவ்வாய்க்கிழமை) சர்வதேச மகளிர் தினத்தை பெண் அதிகாரிகளுக்கான புதிய அடையாள பிரதிநிதித்துவத்தின் மூலம் கடைபிடிக்க உள்ளது. அதன்படி இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு போலீஸ் கமிஷனரகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் பெண் அதிகாரிகள் தலைமை தாங்குவார்கள்.
உயர்மட்ட அளவில் ஆவடி போலீஸ் கமினரகத்தில் தலைமையிடம் மற்றும் போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, ஆவடி சட்டம்-ஒழுங்கு இணை கமிஷனர் பதவியின் கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக (நிர்வாகம்) துணை கமிஷனர் உமையாள், ஆவடி மற்றும் செங்குன்றம் மாவட்ட துணை கமிஷனராக செயல்படுவார். ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் முயற்சியில் சீருடை அணிந்த சேவையில் மகளிரின் பங்கை அங்கீகரித்து கவுரவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.