வாழைப் பயிரைத் தாக்கும் நூற்புழுக்கள்
வாழைப் பயிரைத் தாக்கும் நூற்புழுக்கள்
பொங்கலூர் பகுதியில் வாழைப் பயிரில் நூற்புழுக்கள் தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த நூற் புழுக்கள் வேர்களிலும், கிழங்குகளிலும் சாற்றை உறிஞ்சி வாழ்கின்றன. இதனால் வேர்களிலும், கிழங்குகளிலும் கருமை நிறங்கள் காணப்படும். நூற்புழுக்கள் ஏற்படுத்தும் காயங்கள் வழியாக பாக்டீரியா மற்றும் பூசண நோய்க்கிருமிகள் எளிதில் நுழைந்து நோய்களை உண்டாக்க ஏதுவாகும். தாக்கப்பட்ட வாழைகள் வாடும். இதனைக் கட்டுப்படுத்த நடவுக்கு வாழைக்கன்றுகளை நூற்புழுக்கள் தாக்காத இடங்களிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்.
தாக்கிய இடங்களில் மீண்டும் வாழையைப் பயிரிடாமல் மாற்றுப்பயிர் செய்ய வேண்டும். வாழைக் கன்றுகளை நடுவதற்குமுன் கிழங்குப்பகுதியில் உள்ள வேர்கள் மற்றும் கருநிறப் பகுதிகளை கத்தியால் நன்கு சீவிவிட்டு, குழைந்த களிமண்ணில் கிழங்கை முக்கி எடுத்து அதன்மீது 40 கிராம் போரேட் குறுணை மருந்தைப் பரவலாகத் தூவி, பின்னர் நட வேண்டும். இவ்வாறு பொங்கல் ஊரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலிங்கம் தெரிவித்தார்.