சாராயம் காய்ச்சியவர் கைது
ஆலங்குளத்தில் சாராயம் காய்ச்சியவரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம்-அம்பை சாலையில் மர அறுவை ஆலை நடத்தி வருபவர் தினகரன் என்ற ராஜா (வயது 54). இவர் தனது ஆலையில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது கடுக்காய், கருப்பட்டி, பழங்கள் மற்றும் 30 லிட்டர் சாராய ஊறல் ஆகியவை அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, தினகரனையும் கைது செய்தனர்.