சேலத்தில் முடி திருத்தும் கட்டணம் உயர்வு-15-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது
சேலத்தில் முடி திருத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. வருகிற 15-ந் தேதி முதல் புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது;
சேலம்:
சேலம் மண்டல முடிதிருத்தும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மண்டல தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் மூர்த்தி அனைவரையும் வரவேற்றார். மண்டல பொருளாளர் சுப்ரமணியன், துணைத்தலைவர் அதிரூபன், துணை செயலாளர் முனிரத்தினம், செயற்குழு உறுப்பினர்கள் கருணாகரன், வெங்கடாஜலம், இளைஞரணி அமைப்பாளர் ரவி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், முடி திருத்தும் கடைகளில் பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக வருகிற 15-ந் தேதி முதல் முடி திருத்தும் கட்டணத்தை உயர்த்துவது எனவும், மாவட்டத்தில் உள்ள அனைத்து முடிதிருத்தும் தொழிலாளர்களும் புதிய கட்டண உயர்வை கண்டிப்பாக பின்பற்றுவது குறித்தும் முடிவு செய்யப்பட்டது.
இதன்படி கட்டிங், சேவிங்-ரூ.200, கட்டிங் மட்டும்-ரூ.150, சேவிங்-ரூ.80, சிறுவர் கட்டிங் (5 வயதிற்குள்) -ரூ.120-ம், பேபி கட்டிங்-ரூ.130, தாடி ஒதுக்குதல்-ரூ.100, ஹேர்டை மட்டும் ரூ.200, ஹேர் டிரையர் ரூ.80, மாடல் கட்டிங்-ரூ.180 என புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணம் வருகிற 15-ந் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது என்று முடிதிருத்தும் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.