கொண்டலாம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி சாவு

கொண்டலாம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி இறந்தார்.;

Update: 2022-03-07 21:43 GMT
கொண்டலாம்பட்டி:
கொண்டலாம்பட்டி அருகே உள்ள எஸ்.நாட்டமங்கலம் பகுதி ஊத்துக்குளி காட்டை சேர்ந்தவர் முருகன் (வயது 38). வெள்ளி பட்டறை தொழிலாளி. இவர் காட்டூர் மாரியம்மன் கோவிலில் நடந்து வரும் திருவிழாவை காண, மோட்டார் சைக்கிளில் சென்றார். காட்டூர் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதால், கீழே விழுந்து முருகன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்