நெல்லையில் காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்

நெல்லையில் காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்

Update: 2022-03-07 21:38 GMT
நெல்லை:
நெல்லை சந்திப்பு உடையார்பட்டி பூதத்தார் தெரு உள்ளிட்ட பல்வேறு தெரு பகுதிகளுக்கு கடந்த சில மாதங்களாக சரியாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து மாநகராட்சி சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள், பொதுமக்கள் நேற்று உடையார்பட்டி வடக்கு புறவழிச்சாலைக்கு காலிக் குடங்களுடன் சென்றனர். அங்கு மறியல் செய்ய முயற்சி செய்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று மறியல் செய்ய விடாமல் தடுத்தனர். மேலும் கவுன்சிலர் கோகிலவாணி சுரேஷ், மாநகராட்சி அதிகாரி லெனின் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். சீராக குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் முயற்சி கைவிடப்பட்டது.

மேலும் செய்திகள்