களக்காட்டில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
களக்காட்டில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
களக்காடு:
களக்காடு அண்ணா சாலையில் இருந்து சிதம்பரபுரம் செல்லும் சாலை சீரமைப்பு பணிகள் நெடுஞ்சாலை துறை சார்பில், ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இந்த பணிகளில் முறைகேடு நடப்பதாகவும், முறையாக பழைய சாலையை அகற்றாமல் அதன் மீதே புதிய சாலை அமைப்பதாகவும் புகார் தெரிவித்து களக்காட்டில் நேற்று மாலை அ.தி.மு.க., எஸ்.டி.பி.ஐ, மக்கள் போராட்டக் குழு உள்ளிட்ட கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். எஸ்.டி.பி.ஐ. மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராஷா தலைமை தாங்கினார். புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் நெல்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.