இலவச தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு
இலவச தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அரவிந்த் அறிவித்துள்ளார்.;
நாகர்கோவில்,
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்தவர்கள் மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரரின் வயது 20 முதல் 45 வரையிலும், தையல் கலை பயின்றவராகவும், ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். கைம்பெண் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒருமுறை தையல் எந்திரம் பெற்றவர், 7 ஆண்டுகளுக்கு பிறகு அதனை பெற தகுதியுடையவராக கருதப்படுவர்.
இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கலெக்டர் கூறியிருந்தார்.