தீக்காயமடைந்த பெண் சாவு

தீக்காயமடைந்த பெண் உயிரிழந்தார்

Update: 2022-03-07 20:59 GMT
உடையார்பாளையம்
கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தை சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி மீனா(வயது 28). இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகனும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். மீனா, தன் குடும்பத்துடன் அவரது தந்தை வீடான வாணதிரையன்பட்டினம் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீனா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது அருகில் விளையாடிக் கொண்டிருந்த அவரது பெண் குழந்தை மண்எண்ணெய் கேனை தெரியாமல் தட்டி விட்டதால் மீனா உடலில் தீ பற்றியதாக கூறப்படுகிறது. இதில், பலத்த தீக்காயமடைந்த மீனா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசில் வீரமணி கொடுத்தபுகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்