பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் போதைப்பொருட்கள் சிக்கியது
பெங்களூருவில் இருந்து சவுதி அரேபியாவுக்க கடத்திய ரூ.40 லட்சம் போதைப்பொருட்கள் சிக்கியது.
பெங்களூரு:
பெங்களூரு விமான நிலைய சரக்கு முனையத்தில் உள்ள ஒரு பார்சலில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் இருப்பதாகவும், அந்த போதைப்பொருட்கள் பெங்களூருவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு கடத்தி செல்லப்பட இருப்பதாகவும் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சரக்கு முனையம் சென்ற அதிகாரிகள் அங்கு வந்த பார்சல்களை சோதனை செய்தனர். அப்போது தமிழ்நாட்டில் இருந்து ஒரு பார்சல் வந்து இருந்தது.
அந்த பார்சலை பிரித்து பார்த்த போது அதில் ெகடிகாரம் இருந்தது. ஆனாலும் அந்த பார்சல் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் உண்டானது. இதனால் ெகடிகாரத்தை பிரித்து பார்த்த போது அதில் தடை செய்யப்பட்ட ஆம்பேடமேன் என்ற போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. அந்த போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன்மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும். அந்த பார்சலை அனுப்பியவர் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.