தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2022-03-07 20:44 GMT
 வீணாகும் குடிநீர்
இடைக்கோடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட புத்தன்சந்தை- கண்ணுமாமூடு சாலையில் அம்பேட்டின்காளை பகுதியில் சாலையில் குடிநீர் குழாய் உள்ளது. அந்த குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது. பொதுமக்கள் தண்ணீருக்காக பல கி.மீ. தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலையில், குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஷால், மூவோட்டு கோணம்.
தூர்வார வேண்டும்
இரணியல் பகுதியில் இருந்து குருந்தன்கோடு செல்லும் சாலையில் மடவிளாகம் அருகே பண்டாரகுளம் உள்ளது. இந்த குளத்து நீரை அப்பகுதி மக்கள் குளிக்கவும், துணிகளை துவைக்கவும் பயன்படுத்தி வந்தனர். குளம் பராமரிப்பு இல்லாததால், தற்போது அங்கு புற்கள் வளர்ந்து காடு போல் மாறி வருகிறது. எனவே புற்களை அகற்றி குளத்தை தூர்வாரி பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெஸ்பின், சிராயன்குழி.
நடவடிக்கை தேவை
சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரிக்கு தினமும் சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வருகிறார்கள். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி கடற்கரையில் அலங்கார தரை கற்கள் பதிக்கப்பட்ட பகுதியில் பாசி படிந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த வழியாக நடந்து செல்லும் சிறுவர்களும், முதியவர்களும் வழுக்கி விழும் அபாயம் உள்ளது. எனவே பெரிய விபத்து நடப்பதற்கு முன் அலங்கார தரைகற்கள் பதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பாசியை அகற்றி, பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆஷ்வின்,.
சுகாதார சீர்கேடு
குலசேகரபுரம் பஞ்சாயத்தில் கழிவுநீர் ஓடை நிறைந்து வெளியே நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் கொசு உற்பத்தியாகிறது. இந்த வழியாக யாரும் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே கழிவுநீர் ஓடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுடலையாண்டி பிள்ளை, குலசேகரபுரம்.
கால்வாய் ஆக்கிரமிப்பு
குமரி மாவட்டத்தில் ஆங்காங்கே நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. திற்பரப்பு வலது கரை கால்வாய் முழுக்கோடு ஜங்சன் அருகே ஆக்கிரமிக்கப்பட்டு சாலை அமைத்து உள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அனில்குமார், முழுக்கோடு.

மேலும் செய்திகள்