பாம்பு பிடி வீரராக மாறிய மருத்துவ மாணவர்

உக்ரைனில் இருந்து வந்த மருத்துவ மாணவர் பாம்புபிடி வீரராக மாறினார்.

Update: 2022-03-07 20:41 GMT
ராய்ச்சூர்:

உக்ரைனில் போர் நிலவி வரும் நிலையில் அங்கு சிக்கி தவித்த இந்திய மாணவர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. உக்ரைனில் வசித்த மாணவர்கள் பெரும்பாலானோர் மருத்துவம் படித்தவர்கள் தான். தற்போது அவர்களின் மருத்துவ கனவு பறிபோய் உள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர் ஒருவர் பாம்பு பிடிவீரராக மாறி உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

  ராய்ச்சூர் டவுனை சேர்ந்தவர் அப்சர். இவர் பாம்பு பிடிவீரர் ஆவார். இவரது மகன் முகமது உசேன். இவர் உக்ரைனில் மருத்துவம் படித்து வந்தார். தற்போது அங்கு நிலவி வரும் போரால் முகமது உசேன் மருத்துவ கனவு பறிபோய் உள்ளது. உக்ரைனில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ராய்ச்சூருக்கு திரும்பிய முகமது உசேன் தற்போது பாம்பு பிடிவீரராக மாறியுள்ளார். தற்போது அவர் தனது தந்தையுடன் சேர்ந்து பாம்பு பிடித்து வருகிறார்.

  இது குறித்து முகமது உசேன் கூறுகையில், ‘நான் உக்ரைனுக்கு மருத்துவம் படிக்க செல்லும் முன்பே எனது தந்தையுடன் சேர்ந்து பாம்பு பிடித்து உள்ளேன். தற்போது எனது மருத்துவ கனவு கலைந்து உள்ளது. இதனால் தற்காலிகமாக பாம்பு பிடிவீரராக மாறி உள்ளேன். போர் முடிந்ததும் மருத்துவ கல்வியை தொடர்வது குறித்து நடவடிக்கை எடுப்பேன்’ என்று கூறினார்.

மேலும் செய்திகள்