கோவில் வாசலில் கிடந்த நடராஜர் சிலையால் பரபரப்பு
அம்பையில் கோவில் வாசலில் கிடந்த நடராஜர் சிலையால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்பை:
அம்பை மேல புதுத்தெரு சுப்பிரமணிய சுவாமி கோவில் நேற்று மாலையில் பூட்டப்பட்டு இருந்தது. அப்போது கோவிலுக்கு வந்த மர்மநபர் சுமார் ஒரு அடி உயர செம்பினாலான நடராஜர் சிலையை தாளில் பொதிந்தவாறு கோவிலின் முன்பு வாசலில் வைத்து சென்றார்.
பின்னர் கோவிலுக்கு வந்த பக்தர்கள், வாசலில் நடராஜர் சிலை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கிராம நிர்வாக அலுவலர் தங்ககுமார், கிராம நிர்வாக உதவியாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் விரைந்து சென்று, அந்த சிலையை மீட்டு, அம்பை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வெற்றிசெல்வியிடம் ஒப்படைத்தனர். கோவில் வாசலில் கிடந்த நடராஜர் சிலை மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.