ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்;

Update: 2022-03-07 20:16 GMT
சாயல்குடி
சாயல்குடி அருகே சிக்கல் கிராமத்தில் அனைத்திந்திய ஜனநாயக மகளிர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணகி தலைமை தாங்கினார். நிர்வாகி ராஜ்மில் ராணி முன்னிலை வகித்தார். தமிழக அரசு அறிவித்த நகை கடன் தள்ளுபடியை உடனடியாக பயனாளிகளுக்கு வழங்க வேண்டும், கூட்டுறவு வங்கி முன்பு பயனாளிகளின் பட்டியலை வைக்க வேண்டும், தவறும்பட்சத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை பெண்கள் மற்றும் பயனாளிகளை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அனைத்திந்திய ஜனநாயக மகளிர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்