வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு
கபிஸ்தலம் அருகே பேரூராட்சி செயல் அலுவலரின் வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் ஆகியவற்றை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தடிவருகின்றனர்.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே பேரூராட்சி செயல் அலுவலரின் வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் ஆகியவற்றை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி ே்தடிவருகின்றனர்.
பேரூராட்சி செயல் அலுவலர்
கபிஸ்தலம் அருகே உள்ள சோமேஸ்வரபுரம் மேலத்தெருவில் வசிப்பவர் சந்திரகுமார்(வயது49). இவர் திருச்சி சமயபுரத்தில் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது குழந்தைகளின் படிப்புக்காக தஞ்சையில் வசித்து வருகிறார்.
இதனால் சோமேஸ்வரபுரத்திற்கு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை வந்து உறவினர்களையும், வீட்டையும் பார்த்துவிட்டு செல்வது வழக்கம். நேற்று சந்திரகுமார் வீட்டின் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர். இதனை பார்த்த அவரது உறவினர்கள் சந்திரகுமாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.
வலைவீச்சு
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் கமல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தஞ்சையிலிருந்து கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
பேரூராட்சி செயல் அலுவலரின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடிவருகி்ன்றனர்.