விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு புறம்போக்கு இடத்தில் குடிமனை பட்டா கேட்டு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-03-07 20:09 GMT
திருப்பனந்தாள்:
அரசு புறம்போக்கு இடத்தில் குடிமனை பட்டா கேட்டு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
குடிமனை பட்டா 
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியத்துக்குட்பட்ட கண்ணாரக்குடி ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.  இந்தநிலையில் கண்ணாரக்குடி ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் தங்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் என அரசு அதிகாரிகளிடம் விவசாய தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அரசு புறம்போக்கு இடத்தில் விவசாய தொழிலாளர்கள் குடிசை அமைத்தனர். தகவல் அறிந்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில்  அனைவருக்கும் குடி மனைபட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தனர்.
ஆர்ப்பாட்டம் 
நேற்று கண்ணாரக்குடி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விவசாய தொழிலாளர்கள் சார்பில்  குடிமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் ஜீவபாரதி, ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சாமிக்கண்ணு, வெற்றிச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.  அதனை தொடர்ந்து கண்ணாரக்குடி கிராம நிர்வாக அதிகாரியிடம் விவசாய தொழிலாளர்கள் குடிமனை பட்டா கேட்டு மனு அளித்தனர். அப்போது அவர்கள்  குடிமனை பட்டா வழங்காவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றனர்.

மேலும் செய்திகள்