குடிநீர் கேட்டு யூனியன் அலுவலகம் முற்றுகை
ராஜபாளையத்தில் குடிநீர் கேட்டு யூனியன் அலுவலகத்தை ெபாதுமக்கள் முற்றுகையிட்டனர்;
ராஜபாளையம்,
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அருள்புத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிறிஸ்துராஜபுரம் பகுதி 4 மற்றும் 5-வது வார்டு பகுதிகளை சேர்ந்த பெண்கள் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வரவில்லை என கூறி காலிக்குடங்களுடன் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய தலைவர் சிங்கராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் 2 நாட்களில் போர்வெல் அமைத்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் சிங்கராஜ் கூறினார். பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.