திருப்புறம்பியம் சாட்சிநாதர் கோவில் தேர் சீரமைக்கப்பட்டு தேரோட்டம் நடத்தப்படும்
திருப்புறம்பியம் சாட்சிநாதர் கோவில் தேர் சீரமைக்கப்பட்டு தேரோட்டம் நடத்தப்படும் என்று மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கூறினார்.;
கபிஸ்தலம்:
திருப்புறம்பியம் சாட்சிநாதர் கோவில் தேர் சீரமைக்கப்பட்டு தேரோட்டம் நடத்தப்படும் என்று மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கூறினார்.
சாமி தரிசனம்
சுவாமிமலை அருகே உள்ள திருப்புறம்பியம் சாட்சிநாதர் கோவிலுக்கு மதுரை 293-வது ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று வந்தார். அவரை கோவில் டிரஸ்டி கோவிந்தராஜ் மற்றும் கோவில் பணியாளர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். பின்னர் அவர் சாமி தரிசனம் செய்துவிட்டு, நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களின் சொத்துக்களும் அரசியல் வாதிகள் கைவசம் உள்ளது. இதனால் கோவில்களை முறையாக பராமரிப்பு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய அரசு நிலைப்பாடு சரியானது
தற்போது உள்ள சூழ்நிலையில் வெளிநாட்டு கல்வி என்பது தேவையற்றது. இந்த வெளிநாட்டு கல்வியை நாம் போய் கற்பதால் தான் உக்ரைன் போன்ற பல்வேறு நாடுகளில் நடைபெறும் போராட்டத்தால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதையும், தமிழில் அர்ச்சனை செய்வதையும் நான் மனமார வரவேற்கிறேன்.
கடந்த காலங்களில் உக்ரைன் அரசும், காங்கிரஸ் அரசும் சேர்ந்து இலங்கை தமிழர் படுகொலைக்கு முழு காரணமாக விளங்கின. தற்போது ரஷியா- உக்ரைன் போரில் இந்திய அரசு எடுத்துள்ள நிலைப்பாடு சரியானதாகும்.
தேரோட்டம்
திருப்புறம்பியம் சாட்சிநாதர் கோவில் புனரமைக்கப்பட்டு, கோவில் தேர் சீரமைக்கப்பட்டு தேரோட்டம் நடத்தப்படும். கோவில் நிலங்களை பராமரித்து வரும் பாரம்பரிய குத்தகைதாரர்கள் இறந்து விட்டால் அவர்களது வாரிசுதாரர்களுக்கு குத்தகை உரிமை செய்ய வழி வகை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.