திருச்சியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

திருச்சியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் விவரம்;

Update:2022-03-08 01:25 IST
திருச்சி, மார்ச்.8-
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 18 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணி முதல் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி முகாம் நடக்கிறது. முகாம் நடக்கும் இடங்கள் வருமாறு:-
திருச்சி மாநகராட்சியில் உள்ள ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், தெப்பகுளம், இ.பி.ரோடு, பீரங்கிகுளம், இருதயபுரம், மேலகல்கண்டார்கோட்டை, சுப்பிரமணியபுரம், காமராஜ்நகர், எடமலைபட்டிபுதூர், பீமநகர், பெரியமிளகுபாறை, தென்னூர், ராமலிங்கநகர், காந்திபுரம், உறையூர், காட்டூர், திருவெறும்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.

மேலும் செய்திகள்