தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்
கும்பகோணத்தில் காந்தியடிகள் சாலை, மகாமகம் குளம் சாலை, மகளிர் கல்லூரி போன்ற இடங்களில் மாடுகள் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். ஒரு சிலர் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைகின்றனர். சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் அடைக்க வேண்டும். மேலும் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-திருமூலன், கும்பகோணம்.