பெண் குளித்ததை செல்போனில் படம் பிடித்த போலீஸ்காரர்

காவலர் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் வசிக்கும் பெண் குளித்ததை ெசல்போனில் ரகசியமாக படம் பிடித்த போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2022-03-07 19:45 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர், 
காவலர் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் வசிக்கும் பெண் குளித்ததை ெசல்போனில் ரகசியமாக படம் பிடித்த போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  
காவலர் குடியிருப்பு 
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வன்னியம்பட்டி  மொட்டமலை பகுதியில், 11-வது பட்டாலியன் காவலர் குடியிருப்பு உள்ளது. அதில் ஏராளமான போலீசார் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில் ஒரு வீட்டில் வசித்துவரும் போலீஸ்காரரின் மனைவி குளித்ததை, அதே குடியிருப்பை சேர்ந்த போலீஸ்காரர் ஆனந்த் (வயது 38) ரகசியமாக தனது செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.
போலீஸ்காரர் மீது வழக்கு 
 இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலீஸ்காரர் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு்ள்ளது. இவர் மதுரை ஒத்தக்கடையை சேர்ந்தவர் ஆவார்.

மேலும் செய்திகள்