வெள்ளிச்சந்தை அருகே வீடு புகுந்து செல்போன்கள், பணம் திருடிய வாலிபர் கைது
வெள்ளிச்சந்தை அருகே வீடு புகுந்து செல்போன்கள், பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
ராஜாக்கமங்கலம்,
வெள்ளிச்சந்தை அருகே வீடு புகுந்து செல்போன்கள், பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருட்டு
வெள்ளிச்சந்தை அருகே பிள்ளைத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சைமன். இவருடைய மனைவி அற்புதம் (வயது 63). சைமன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இவரது 2 மகன்களும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். இதனால் வீட்டில் 2 மருமகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் அற்புதம் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த 2-ந் தேதி அன்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளார். பின்னர் அங்கிருந்த 2 செல்போன்கள், ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்று விட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் வீடு புகுந்து திருடியதாக கீழமுட்டம் பகுதியைச் சேர்ந்த தாசன் மகன் சகாய ஜோஸ் ஆன்றனியை (21) போலீசார் கைது செய்தனர்.