பெரம்பலூர்
பெரம்பலூர் டவுன் வடக்குமாதவி ரோடு சாமியப்பா நகர் 7-வது குறுக்குத் தெருவில் செல்லமுத்து என்பவருக்கு கிணறுடன் கூடிய விவசாய நிலம் உள்ளது. இந்த கிணற்றில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில், பெரம்பலூர் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்க முயன்றனர். ஆனால், கிணற்றை சுற்றி முட்புதர்களும், குப்பை-கூளமும் அதிகளவு இருந்ததாலும், இருட்டி விட்டதாலும் உடலை வெளியே எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.