தாலிக்கு தங்கம், நிதி உதவி வாங்க குவிந்த பெண்கள்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தாலிக்கு தங்கம், நிதி உதவி வாங்க பெண்கள் குவிந்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் மூலம் பள்ளி வகுப்பு மற்றும் பட்டம் படித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஓரிரு வருடங்களாக இந்த திட்டத்தில் விண்ணப்பித்திருந்த பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படாமல் இருந்தது.
இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மீண்டும் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் பணி தொடங்கியது.
இந்த நிலையில் நேற்று இதற்காக விண்ணப்பித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவி வழங்கும் பணி நடைபெற்றது.
திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு உள்ளிட்ட ஒன்றியங்களை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.