ஆம்பூர் நகராட்சி தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட தி.மு.க. வேட்பாளர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
ஆம்பூர் நகராட்சி தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட தி.மு.க. வேட்பாளர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கடந்த 4-ந்் தேதி நகராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற இருந்தது.
தி.மு.க. தலைமையால் அறிவிக்கப்பட்ட 16-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் மற்றும் தலைவர் போட்டி வேட்பாளர் ஏஜாஸ் அஹமத் தேர்தலை நடத்தக்கூடாது என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தலைமை அறிவித்த தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து மனு தாக்கல் செய்த அதே கட்சியைச் சேர்ந்த ஷபீர் அஹமதுக்கு ஆதரவாக பல நகரமன்ற உறுப்பினர்கள் தேர்தல் நடத்த வேண்டும் என கோஷமிட்டனர்.
பின்னர் பல கவுன்சில்கள் தரையில் அமர்ந்து உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷகிலா மற்றும் அதிகாரிகள் ஆலோசனை செய்து தேர்தலை மறு தேதி அறிவிக்கும் வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில் தி.மு.க. வால் அறிவிக்கப்பட்ட தலைவர் வேட்பாளர் ஏஜாஸ் அஹமத் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.