கருணை அடிப்படையில் 2 பேருக்கு பணி நியமன ஆணை
கருணை அடிப்படையில் 2 பேருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் அமர் குஷ்வாஹா வழங்கினார்.
திருப்பத்தூர், மார்ச்.8-
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்த மயில்வாகன் பணியின்போது மரணமடைந்தார்.
அவருடைய மனைவி விமலாவுக்கு திருப்பத்தூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பதிவறை எழுத்தராகவும், திருப்பத்தூர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் பணியின்போது ரவி எந்பவரை மரணமடைந்தார்.
அவரது மகன் அருண்குமாருக்கு கருணை அடிப்படையில், திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் தட்டச்சராக பணி நியமன ஆணையினை கலெக்டர் அமர் குஷ்வாஹா வழங்கினார்.