அன்னவாசல்:
இலுப்பூர் அருகே உள்ள சோலைச்சேரிப்பட்டியில் உள்ள குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பை வனத்துறையினர் நார்த்தாமலை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
இதேபோல் இலுப்பூர் கோட்டை தெருவை சேர்ந்த முருகன் என்பவரது வீட்டின் தண்ணீர் குடம் அருகில் விஷ பாம்பு ஒன்று இருப்பதாக வந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் விஷபாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இலுப்பூர் கிராமின் கூட்ட அரங்கில் உள்ள கழிவறையில் பதுங்கியிருந்த விஷ பாம்பையும் தீயணைப்புதுறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.