வேளாண்மை கல்லூரி மாணவிகள் களப்பணி
வேளாண்மை கல்லூரி மாணவிகள் களப்பணியில் ஈடுபட்டனர்.
ஆதனக்கோட்டை:
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பெருங்களூர் ஊராட்சியில் உள்ள பாப்பாவயல் கிராமத்தில் கோழிப்பண்ணையிலும், மாந்தாங்குடி கிராமத்தில் வயல் வெளிகளிலும் திருவரங்குளத்தில் உள்ள தனியார் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் தங்கி களப்பணி பயிற்சியை விவசாயிகளுடன் சேர்ந்து பெற்றனர். கல்லூரி மாணவிகள் கல்வி கற்ற விபரத்தை விவசாயிகளுக்கும், விவசாயிகளிடமிருந்து அனுபவ அறிவையும் பரிமாறிக்கொண்டனர். இதில் ஒரு பகுதியாக விவசாயிகளின் தோட்டத்தில் இருந்த சென்டி பூக்களை தோட்டக்காரர்களின் அனுமதியோடு எப்படி பறிப்பது என தெரிந்துகொண்டு பறித்துக் கொடுத்தார்கள். மேலும் பாப்பாவயலில் உள்ள கோழிப்பண்ணையை எவ்வாறு பராமரிப்பது என களப்பணியில் ஈடுபட்டு தெரிந்து கொண்டனர். மாணவிகளுக்கு தேவையான உதவிகளை பெருங்களூர் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ஜெய்சங்கர் செய்து கொடுத்தார்.