பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறித்து சென்றனர்.

Update: 2022-03-07 18:19 GMT
அரிமளம்:
அரிமளம் அருகே சத்திரம் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள அரிமளம் வடக்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி ஜெயலட்சுமி (வயது 63) என்பவர் சென்றுள்ளார். அப்போது சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலில் தண்ணீர் வாங்கி ஜெயலட்சுமி குடித்து கொண்டிருந்தார். அப்போது கூட்ட நெரிசலை வாய்ப்பாக பயன்படுத்திய மர்மநபர் ஜெயலட்சுமி கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை திருடி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்