தேரடி திடலில் தேங்கி நிற்கும் தண்ணீர்

தேரடி திடலில் தேங்கி நிற்கும் தண்ணீர்

Update: 2022-03-07 18:07 GMT
மன்னார்குடி;
மன்னார்குடியில் நேற்று முன்தினம் இரவு காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை இரவிலும் நீடித்தது.   இதனால் மன்னார்குடி தேரடி பகுதியில் உள்ள கலையரங்க திடலில் மழைநீர் தேங்கி நின்றது. மழை பெய்யும் போது இந்த திடலில் மழைநீர் தேங்கி நிற்பது வாடிக்கையாக உள்ளது. இங்கு மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவுவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இந்த திடலில் மழைநீர் தேங்காமல்   வடிவதற்கு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கேரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்