பொன்னமராவதி, ஆதனக்கோட்டையில் கொரோனா தடுப்பூசி முகாம்

கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Update: 2022-03-07 18:07 GMT
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தலைமை தாங்கினார். முகாமில் செவிலியர் பொதுமக்களுக்கு கொரோனோ தடுப்பூசி போட்டார். இதில் வார்டு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் செவலூர் ஊராட்சியிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதேபோல் ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பெருங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வாராப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து ஆதனக்கோட்டையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தியது. முகாமில் முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி 310 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 2,551 பேருக்கும் என மொத்தம் 2861 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன. பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை போட்டுக்கொண்டனர். அனைத்து முகாம்களையும் மருத்துவ அலுவலர் (பொறுப்பு) குணசீலி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்