குமரி எல்லையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
குமரி எல்லையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆரல்வாய்மொழி,
குமரி எல்லையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குமரி வருகை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் நேற்று காலையில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு கார் மூலம் குமரி மாவட்டத்துக்கு பகல் 2 மணி அளவில் வந்தார். அப்போது அவருடன் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை காவல் கிணறு பகுதியில் கலெக்டர் அரவிந்த், போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் வரவேற்றனர்.
ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலை முன்பு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், நாகர்கோவில் மாநகர மேயருமான மகேஷ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்ஸ் லதா, விஜய் வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், மாவட்ட பொருளாளர் கேட்சன், துணை செயலாளர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர்கள் தாமரை பாரதி, மதியழகன், குட்டி ராஜன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், பூதப்பாண்டி அரசு வக்கீல் பழனி, பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர் தாஸ் மற்றும் மாவட்ட ஒன்றிய, பேரூர் தி.மு.க. நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அனைவரிடமும் இருந்து பொன்னாடைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டு நாகர்கோவில் புறப்பட்டு வந்தார்.