லாரி மோதி டிரைவர் படுகாயம்

லாரி மோதி டிரைவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-03-07 18:00 GMT
கரூர்
கிருஷ்ணராயபுரம்,
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், தொண்டைமாங்கிணம் ஊராட்சி கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 40) லாரி டிரைவர். இவர் ஓட்டி வந்த லாரி கிருஷ்ணராயபுரம் அருகே ஆர்.புதுக்கோட்டை பகுதியில் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றது. அதனை சரி செய்வதற்காக கருப்பையா லாரி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பாதபட்டியை சேர்ந்த ராஜகோபால் (37) என்பவர் ஓட்டி வந்த லாரி எதிர்பாராதவிதமாக கருப்பையா மீது மோதியது. 
இதில் படுகாயமடைந்த கருப்பையாவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்