தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-07 17:58 GMT
கரூர்
கிருஷ்ணராயபுரம், 
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் அருள்முருகன் (வயது 32) கூலிதொழிலாளி. இவர் சமீப கடந்த பல நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மருந்து சாப்பிட்டு வந்தும் வயிற்று வலி சரியாகவில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அருள்முருகன் சம்பவத்தன்று பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக முசிறியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்து அருள்முருகனின் தந்தை சண்முகம் கொடுத்த புகாரின்பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்